நாட்டின் பல பிரதேசங்களிலும் இஸ்லாமியர்களின் புனித நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

இஸ்லாமிய மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை  புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். நாட்டின் பல பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய மக்களும் இன்று செவ்வாய்க்கிழமை  நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.

மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் காலை 8.00 மணியளவில் பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றது.

காலை 7.00 மணிக்கு பெண்களுக்கும் காலை 8.00 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.

குறித்த பெருநாள் தொழுகை மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது நோன்பு பெரு நாளின் முக்கியத்துவம், அல்குர்ஆன் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்து கூறப்பட்டது.

மேலும், மாவட்டத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றது.

யாழ். ஒஸ்மானியக்கல்லூரியின் திறந்த மைதானத்தில் புனித றம்ழான் தின துவாப்பிராத்தனைகள் இடம்பெற்றன.

இவ் துவாப்பிராத்தனையும் குப்த பிரசங்கத்தினையும் மௌலவி எ.எச்.ரகீம் தலைமையில் நடாத்தி வைக்கப்பட்டது.

இதில் யாழின் பல பாகங்களிலும் இருந்து வருகைதந்த இஸ்லாமிய மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் ஏ.சி.எம். இஹ்ஸான் (ஹாபிழி) நிகழ்த்தினார்.

சாய்ந்தமருது அல்- அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் சாய்ந்தமருது கமுஃகமுஃ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் மௌலவி அப்துல் ஜப்பார் நிகழ்த்தினார்.

சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்மாப் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் சாய்ந்தமருது அப்பிள் தோட்ட திடலில் இடம்பெற்றது. பெருநாள் தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஆசிரியர் மௌலவி ஏ.ஹலீலுர்ரஹ்மான் (ஸலபி) நிகழ்த்தினார்.

சவளக்கடை 6ஆம் கிராமம் பிலால் ஜூம்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்த புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் அல்-தாஜூன் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் பிலால் ஜூம்ஆ பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி ஏ.ஆர்.எம்.நபீல் நிகழ்த்தினார்.

இப்பெருநாள் தொழுகையில் பெருந்திரளான ஆண், பெண் இருபாலரும் கலந்துகொண்டனர்.