நாட்டின் பல பாகங்களில் மழையுடனான வானிலை
நாட்டின் பல பாகங்களில், இன்று வெள்ளிக்கிழமை மழையுடனான வானிலை நிலவும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும்.
மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும், மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
