நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய, சபரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் இவ்வாறு மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்து கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க