நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய, சபரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் காலை வேளையில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.