நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

கிழக்கு, மத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், பொலன்னறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது .

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய மின்னல் தாக்கம் மற்றும் தற்காலிக பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.