நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை

நாட்டின், சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.