
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் உயர்வு!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் மோசமடைந்து காணப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புகை பரிசோதித்தல் நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு 7, யாழ்ப்பாணம், திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் 60 முதல் 118 இடைப்பட்ட அளவில் காற்றின் தரச் சுட்டெண் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சுவாசப்பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் காற்றின் தரச் சுட்டெண் சீரான நிலையில் உள்ளதாகவும், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புகை பரிசோதித்தல் நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்