
நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பலத்த மழை!
நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பல பகுதிகளிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
அத்துடன் வடமத்திய மாகாணத்திலும், மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.