நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய, சபரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில  இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஊவா மாகாணத்தின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.