நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, வட மாகாணத்தின் சில இடங்களில் 50 மில்லி மீற்றரிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, அம்பாறை, மட்டக்களப்பு, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்கும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
