
நாட்டின் பல நகரங்களில் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில்!
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி நேரத்தில் சற்று ஆரோக்கியமற்ற மட்டத்தில் காணப்படுகின்றது.
கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல் மற்றும் காலி போன்ற பகுதிகளில் இலங்கையின் காற்று தரக் குறியீடு (SL AQI) அளவு 104 முதல் 144 வரை பதிவாகியுள்ளது.
இதற்கு நேர்மாறாக, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற நகரங்கள், மிதமான காற்றின் தர மட்டங்களுக்குள் இருக்கின்றன.
பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சற்று ஆரோக்கியமற்ற நிலைமைகள் தொடரும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
