நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரிப்பு

நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும் பணவீக்க விகிதம், செப்டம்பரில் 1.5% இலிருந்து ஒக்டோபரில் 2.1% ஆக அதிகரித்துள்ளது.
உணவு பணவீக்கம் செப்டம்பரில் 2.9% இலிருந்து 3.5% ஆகவும், உணவு அல்லாத பணவீக்கம் செப்டம்பரில் 0.7% இலிருந்து 1.4% ஆகவும் அதிகரித்துள்ளது.