நாட்டின் சேவை துறையில் வளர்ச்சி!
நாட்டின் சேவை நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பர் மாதத்தில் சற்று வளர்ச்சி கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சேவைத் துறையில் இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் குறியீடு கடந்த செப்டெம்பர் மாதத்தில் 53.1 ஆகப் பதிவாகியுள்ளது.
மத்திய வங்கி அறிக்கையின் படி, புதிய தொழில்கள் ஓரளவு வளர்ச்சி காணப்பட்டாலும், வேலை வாய்ப்பு மற்றும் முடிக்க வேண்டிய பணிகளில் சரிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
