நாட்டி;ன் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைப்பகுதியின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், அவ்வப்போது கி.மீ. 50 வரை பலத்த காற்று வீச கூடும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.