நாட்டின் சில பகுதிகளில் மழை

நாட்டின், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.