நாட்டின் சில இடங்களில் கடுமையான வெப்பமான வானிலை!

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்று சனிக்கிழமை மனித உடலுக்கு உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மிகவும் வெப்பமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென், மத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் வரை மிதமான கனமழை பெய்யக்கூடும்.