நாட்டின் சனத்தொகையில் யாருடைய வளர்ச்சி அதிகம்?

நாட்டின் மொத்த சனத்தொகையில் 74.1 வீதமானோர் சிங்களவர்களென கணிப்பிடப்பட்டுள்ளது.

12.3 வீதமான இலங்கை தமிழர்களும், 10.5 வீதமான இலங்கை சோனகர் மற்றும் முஸ்லிம்களும், 2.8 வீதமான மலையகத் தமிழர்களும், எஞ்சிய 0.3 வீதமானவர்கள் பறங்கியர்கள், மலாயர்கள், இலங்கை செட்டிகள், பாரதர்கள் மற்றும் வேடர்கள் உள்ளிட்ட ஏனைய இனக் குழுக்களாகவும் பதிவாகியுள்ளனர்.

இதன்படி, மொத்த சனத்தொகையில் 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இன ரீதியில் இலங்கை தமிழர்களின் வருடாந்த அதிகரிப்பானது, 0.4 வீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

எனினும், மலையகத் தமிழர்களின் அதிகரிப்பு எண்ணிக்கை, – 2.6 வீதமாக பதிவாகியுள்ளது.

அதன்படி மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை கடந்த 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.

இதன்படி, 2012 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நாட்டின் மொத்த சனத்தொகையில் அதிக வளர்ச்சி வேகத்தை இலங்கை முஸ்லிம்கள் வெளிகாட்டியுள்ளனர்.

அதன்படி, இலங்கை முஸ்லிம்களின் வளர்ச்சி வீதமானது, மொத்த சனத்தொகை வளர்ச்சி வேகத்தின் மூன்று மடங்கிற்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்ட வளர்ச்சியை இலங்கை தமிழர்கள் பதிவு செய்துள்ளதுடன், அது 1.3 வீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் 70 வீதத்திற்கும் அதிகமாக சிங்களவர்கள் மாத்திரமே வசிப்பதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டு வவுனியா மாவட்டத்தில் 0.8 வீதத்தாலும், யாழ்ப்பாணத்தில் 0.2 வீதத்தாலும் சிங்களவர்களின் தொகை அதிகரித்துள்ளது.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 7.7 வீதத்தில் பாரிய அளவில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் அம்பாறை, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இந்திய தமிழர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது.