நாடு முழுவதும் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு – வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டாம்

கனமழை காரணமாக டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதால், டெங்கு காய்ச்சலுக்கு இப்யூபுரூஃபன் அல்லது ஆஸ்பிரின் போன்ற அழற்சி எதிர்ப்பு வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகர் சமூக வைத்தியர் டாக்டர் நிமல்கா பன்னில ஹெட்டி, உடல் வெப்பநிலையைக் குறைக்கவும் ,வலியைக் குறைக்கவும் பாராசிட்டமால் மாத்திரமே உட்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தினார்.

இருப்பினும், மருத்துவரின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து இரண்டாவது நாளாக காய்ச்சல் நீடித்தால் முழு இரத்த சோதனையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து தடுப்பதற்கான நீண்ட கை சட்டை மற்றும் கால்களை மறைக்க கூடிய உடை அணிவது கொசுக்கடியின் பாதிப்பைக் குறைக்கும் எனவும் , நுலம்பு விரட்டிகள் மற்றும் வலைகளைப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, வீட்டையும் சுற்றுப்புறத்தையும் உலர்வாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கவும், நுலம்புகள்; அவற்றின் முட்டைகளை பழைய டயர்கள் மற்றும் தேவையற்ற தண்ணீர் சேமிப்புக் கொள்கலன்கள் போன்றவற்றை வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வைப்பதைத் தவிர்க்கவும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்படி, 2023 ஆம் ஆண்டு இதுவரை 31,450 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளன, மேலும் அதிக எண்ணிக்கையிலான தொற்றுக்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்