நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்

நாடு முழுவதும் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வீசும்

புத்தளத்திலிருந்து மன்னாரிலிருந்து காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை பொத்துவில் வரையிலும், கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது, அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 10 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.

கடல் பகுதிகள் கொந்தளிப்பாக மாறக்கூடும், என்றும் வானிலை அறிவிப்பு தெரிவிக்கிறது.