
நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச
நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் நடந்து வரும், கொலை கலாச்சாரம் இருந்து வரும் நிலையில், நாட்டு மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது, இதனால், சமூகத்தில் அனைவரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும், என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் பொது அவர் இதனை தெரிவித்தார்.
பிள்ளைகள் மற்றும் ஒட்டு மொத்த சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் முறையான வேலைத்திட்டத்தை முன்வையுங்கள், நீதிபதிகளினதும் சட்டத்தரணிகளினதும் பாதுகாப்பு கூட பாதிக்கப்பட்டுள்ளன, இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
