
நாடு திரும்பும்போது விமானத்தில் உயிரிழந்த பணிப்பெண்
கட்டாருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும்போது இன்று திங்கட்கிழமை விமானத்தில் உயிரிழந்துள்ளார்.
மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ (வயது-40) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கட்டார் ஏர்வேஸ் விமானமான கே.ஆர்-662 மூலம் அவர் இன்று அதிகாலை 1.17 மணியளவில் கட்டாரின் தோஹாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.
