நாடு திரும்புகிறார் கோட்டாபய ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் 07 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் அளித்த பின், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உதயங்க வீரதுங்க,
கோட்டாபய ராஜபக்ஷ ஒரு புத்திசாலி அரசியல்வாதி அல்ல, புத்திசாலியான அதிகாரி. எனினும், முன்னாள் ஜனாதிபதி மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார் என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ச தனது நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தற்காலிகமாக தங்கியிருக்க முடியும் எனவும் தாய்லாந்து பிரதமர் தெரிவித்திருந்தார்.
