நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் பிரபல நடிகர் உத்திக பிரேமரத்ன

இலங்கையின் பிரபல நடிகரும் அனுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினருமான உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை கையளித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், அனுராதபுரத்தில் உள்ள அவரது தந்தையின் இல்லத்திற்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமரத்னவின் வாகனத்தின் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன 2020 பாராளுமன்ற தேர்தலில் அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  கீழ் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பிரேமரத்ன கடந்த வருடம் முதல் சுயேச்சையாக செயற்பட்டு வருகின்றார்.