
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தைப்பொங்கல் கொண்டாட்டம்!
தைப்பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு, விசேட தைப்பொங்கல் பூஜை வழிபாடுகள் மட்டக்களப்பு செட்டிபாளையம் வீரம்மாகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன்போது மூன்று பானைகளில் பொங்கல் பொங்கப்பட்டு அம்பாளுக்கும், சூரிய பகவானுக்கும் விசேட பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை ஆரம்பித்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, இரா.சாணக்கியன், செட்டிபாளையம் பகுதியில் உள்ள பல்வேறு ஆலயங்களுக்கும் விஜயம் செய்து தைத்திருநாள் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
செட்டிபாளையம் சிவன் ஆலயம்,முருகன் ஆலயம்,பைரவர் ஆலயம் என்பவனற்றில் சிறப்பு தைத்திருநாள் வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.








