நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத தசநாயகவிற்கு கொலை மிரட்டல்

-பதுளை நிருபர்-

முன்னாள் ஊவா மாகாண சபை முதலமைச்சரும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான, சாமர சம்பத தசநாயகவிற்கு ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“நீ இன்னும் உயிருடன் இருக்கின்றாயா ? எமது பெயர் பட்டியலில் நீயும் இருக்கின்றாய்”, என கொலை மிரட்டல் விடுத்து முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்திருந்த நபருக்கு எதிராக, ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் இன்று மாலை சுமார் 3.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத தசநாயகவின் செயலாளரினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக, ஹாலிஎல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.