நாடாளுமன்ற உறுப்பினர் ஆகின்றார் இலங்கையில் முன்னணி வர்த்தகர் தம்மிக்க பெரேரா?

இலங்கையில் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேராவின் பெயர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வர்த்தக வலையமைப்பு ஒன்றின் தலைவராக செயற்படும் தம்மிக்க பெரேரா  அப்பதவியில் இருந்து விலக உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.

இதனையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்காக தம்மிக்க பெரேரா தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதன் பின்னர், அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதுவரை அது தொடர்பான இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.