நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமனம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அவரது பாதுகாப்பிற்காக 6 பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்க பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இதுவரை பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸார் வழங்கப்பட்டிருந்த நிலையில், மேலதிகமாக 4 பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்க அமைச்சர் பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, பிரதேச பொலிஸ் நிலையங்களில் உள்ள தாம் விரும்பிய பொலிஸ் அதிகாரிகளை அமைச்சர் பாதுகாப்பு பிரிவில் இணைத்து கொண்டு பாதுகாப்பு பணிகளுக்கு அமர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.