நாடாளுமன்ற உறுப்பினரை காணவில்லை என முறைப்பாடு

-பதுளை நிருபர்-

மலையகத்தை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரொருவர், காணாமல் போய்விட்டாரெனக்கூறி, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அவசர பொலிஸ் பிரிவான 119 இற்கு அழைப்பை ஏற்படுத்தி   முட்டாள்கள் தினமான ஏப்ரல் முதலாம் திகதி இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

அன்றைய தினம் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பில் இருந்துள்ளாராம்.

இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டவர் தொடர்பில் விசாரணை நடத்தியபோது, சம்பந்தப்பட்ட அரசியல் வாதிக்கு நெருக்கமானவரென தெரிய வந்துள்ளதாம்.

குறிப்பு – (பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்தி போலி தகவல்களை வழங்குவதும், முறையற்ற விதத்தில் நடந்துகொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறான முயற்சிகளில் எவரும் ஈடுபட வேண்டாம்.)