நாடாளுமன்ற இணையத்தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்த மேலும் இருவரிடம் வாக்கு மூலம்
நாடாளுமன்ற இணையத்தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் இரண்டு உத்தியோகத்தர்களிடம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.
நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்பாக தவறாக பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பிலேயே குறித்த இரண்டு உத்தியோகத்தர்களிடமும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
மேலும் அவர்களிடம் மூன்று மணித்தியாலங்கள் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்