நாடாளுமன்றம் அருகில் போராட்டம்

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழில் கோரும் பட்டதாரி குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலுக்குள் நுழைய முயன்றபோது பதற்றமான நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் போராட்டம் நடத்தக் கூடாது என அண்மையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.