நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எடுக்கவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை புதன்கிழமை நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என, சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு நாளை காலை 10 மணிக்கு அழைப்பு விடுததுள்ளதாகவும் தற்போதைய சூழ்நிலையில், கூட்ட நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி நிலை குறித்து மாத்திரம் பேசுவதற்கு மாத்திரம் சபாநாயகர் சபையைக் கூட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
