
நாடாளுமன்றத்தில் இன்று தொடக்கம் வெள்ளி வரை அமர்வு
நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது. இந் கூட்டம் இன்று சபாநாயகரின் தலைமையில முற்பகல் 11.30 ஆரம்பமாகவுள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழ் செஸ் வரி தொடர்பான கட்டளை, விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 09 கட்டளைகள், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் 03 ஒழுங்குவிதிகள் மற்றும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் தொடர்பில் இன்று விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பிலான தெரிவுக்குழுவின் கூட்டம், இன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது.
