நாடாளுமன்றத்திற்கு சால்வை அணிந்து வந்த சஜித் பிரேமதாச

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்களை  வெளிப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சால்வை அணிந்து பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை உரையாற்றிய அவர்,  மோதலில் கொல்லப்பட்ட பெண்கள். குழந்தைகள் மற்றும் குடிமக்களின் அனுதாபங்களை தெரிவித்து கொள்ளும் விதமாக அவர் இவ்வாறு சால்வை அணிந்ததாக தெரிவித்தார்.

இரு நாட்டு பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை தாங்கள் கண்டிக்கிறோம். அதே நேரத்தில் தேசியவாதம் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களை நிராகரிக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.