நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்து 72,553 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்!
-யாழ் நிருபர்-
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 3568 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.
அந்தவகையில், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மற்றும் அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைந்துள்ள பரீட்சை நிலையங்களிலும் இவ்வாறு பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்து 72 இரண்டாயிரத்து 553 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
இதில் 3 இலட்சத்து 94 ஆயிரத்து 450 பரீட்சார்த்திகள் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பதுடன், 78 ஆயிரத்து 103 பரீட்சார்த்திகள் தனியார் பரீட்சார்த்திகள் ஆகும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்