நாடளாவிய ரீதியில் போராட்டத்திற்குத் தயாராகும் தாதியர்கள்
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தாதியர் சேவையிலுள்ளவர்கள் தீர்மானித்துள்ளனர்.
பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு முன்பாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் இன்று வியாழக்கிழமைமதிய உணவு நேரத்தில் நண்பகல் 12 மணிக்குப் போராட்டம் நடைபெறும் என்று தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்shர்
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, பொருட்கள் ஏற்றுமதி வருவாயில் 3.51 சதவீத அதிகரிப்பும், விவசாய ஏற்றுமதி வருவாயில் 14.87 சதவீத அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது.
தொழில்துறை ஏற்றுமதி வருவாயில் 0.08 சதவீதமும், சேவை ஏற்றுமதி வருவாயில் 37.87 சதவீதமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.