நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்
‘Clean SriLanka’ வேலைத்திட்டத்திற்கமைய கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழான கெளதாரிமுனை கடற்கரைப் பிரதேசத்தினை சுத்தம் செய்யும் பணி இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
55 இராணுவ படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் அருனா விஜகோன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் ஆகியோரின் பங்கேற்புடன் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கெளதாரிமுனை கடற்கரை பிரதேசத்தின் 7 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இச் சிரமதான பணியில் பூநகரி பிரதேச செயலாளர் ஆயகுலன்,எனைய திணைக்களங்களின் அரச அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கெடுத்திருந்தனர்.