நாடளாவிய ஊரடங்கு சட்டம் நீடிப்பு

நாடு முழுவதும் நேற்று திங்கட்கிழமை அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை புதன்கிழமை காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள்இ , தொடருந்து மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், வேறு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.