நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரை செல்லும் சிவகங்கை என பெயர் சூட்டப்பட்டுள்ள பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படுவதையொட்டி இன்று சனிக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
முன்பதிவுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனக்கூறியுள்ள தனியார் கப்பல் நிறுவனம், இக்கப்பலில் சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகள் விற்பனைக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
