நாகரீகமற்ற நடவடிக்கைகளை தடுக்கும் செயற்றிட்டம்

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணக் கோட்டையில் இடம்பெறும் நாகரீகமற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்குடனான தூய்மைப்படுத்தல் செயற்றிட்டம், இன்று காலை இடம்பெற்றது.

தொல் பொருள் திணைக்களம், யாழ். மாநகர சபை, யாழ். பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இந்த செயற்திட்டத்தை முன்னெடுத்தன.

யாழ். கோட்டை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் மூலம் கோட்டைப் பகுதியில் இடம்பெறும் சமூகப் பிறழ்வான நடவக்கைகளைக் கட்டுப்படுத்த முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த செயற்றிட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தினர், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள், யாழ்.பிரதேச செயலகப் பணியாளர்கள், சமூக மட்ட அமைப்புக்கள், தன்னார்வ தொண்டு அமைப்புக்கள், இளையோர் அமைப்புக்கள் என பலரும் இணைந்திருந்தனர்.