நவராத்திரி நாட்களில் இதை செய்யுங்கள் அளவற்ற பலன்கள் கிடைக்கும்
நவராத்திரி நாட்களில் சகலகலாவல்லி மாலை, அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லகிரி, லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றைத் தவறாமல் பாராயணம் செய்தல் வேண்டும்.
அதேபோல், நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, கன்யா பூஜை ஆகியவற்றைச் செய்தல் வேண்டும்.
இது அளவற்ற பலன்களை அள்ளித் தரும்.
வேலை நிமிர்த்தம் காரணமாக அனைவராலும் இந்தப் பாராயணம், பூஜைகளைச் செய்ய முடிவதில்லை.
இத்தகையவர்களுக்காகவே நமது முன்னோர்கள் அகண்ட தீபம் ஏற்றும் ஒரு வழிமுறையைக் கூறியுள்ளனர்.
அகண்ட தீபம் என்பது விளக்கைத் தொடர்ந்து எரிய வைப்பது ஆகும்.
நவராத்திரி கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் இதைச் செய்யலாம்.
தேவியைப் பூஜிக்கும் இடத்தின் அருகில் ஒரு மரப்பலகையில் மூன்று கோணமாகச் சந்தனத்தால் கோடு போட்டு, நடுவில் சந்தனம் குங்குமமிட்டு, பூப்போட்டு அதன் மீது விளக்கு வைக்க வேண்டும்.
அம்மனுக்கு இடது பக்கம், வலது பக்கம் என இரு பக்கங்களிலும் விளக்கை ஏற்ற வேண்டும்.
ஒரு விளக்கு, மண் அகல் விளக்காகவும் மற்றொன்று வெள்ளி அல்லது பித்தளை விளக்காகவும் இருக்கலாம்.
நவராத்திரி 9 நாட்களும் இந்த இரு விளக்குகளும் தொடர்ந்து எரிவது நல்லது.
இல்லையெனில், கடைசி 3 நாட்கள் அல்லது கடைசி நாள் விடாமல் எரிய வேண்டும்.
நவராத்திரி முடிந்ததும் இந்த இரு விளக்குகளையும் தானமாகக் கொடுத்து விட வேண்டும்.
இந்த அகண்ட தீப வழிபாட்டால், சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
