நள்ளிரவு முதல் மின் கட்டனத்தில் திருத்தம்: புதிய கட்டணம் அறிவிப்பு
மின்சார கட்டணங்களை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, வீட்டு பாவனைக்கான மின்சார கட்டணம் 0 முதல் 30 வரையான அலகுகளுக்கு உட்பட்ட பிரிவுக்கு, 65 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அலகொன்றுக்கான கட்டணம், 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாதாந்த நிலையான கட்டணத்தை, 400 ரூபாவிலிருந்து 150 ரூபா வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்