நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் பெரும் உயர்வு
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco) இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் பெரும் உயர்வை அறிவித்துள்ளது.
அதன்படிஇ ஒரு லீட்டர் ஆட்டோ டீசலின் விலை ரூ. 79 அதிகரித்து ரூ. 382 ஆகவும், சூப்பர் டீசலின் விலை ரூ. 90 அதிகரித்து ரூ. 443 ஆகவும் உயர்ந்துள்ளது.
பெற்றோல் ஆக்டேன் 92 ஒரு லீட்டருக்கு ரூ. 81 அதிகரித்து ரூ. 398 ஆகவும், ஆக்டேன் 95 ஒரு லீட்டருக்கு ரூ. 90 அதிகரித்து ரூ. 455 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மண்ணெண்ணெய் ஒரு லீட்டருக்கு ரூ. 60 உயர்த்தப்பட்டு ரூ. 255 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் நிலையில் இந்த விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
