நள்ளிரவில் கடை உடைத்து திருட்டு!

கிளிநொச்சி கனகபுரம் வீதியில், புகையிரத கடவைக்கு அருகாமையில் இயங்கி வந்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு களவாடப்பட்டிருந்தன.

இது குறித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணையில், கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் குறித்த திருட்டில் ஈடுபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் ஒரு இலட்சம் ரூபா மதிக்கத்தக்க கைப்பேசி மற்றும் ஸ்மார்ட் கைகடிகாரங்கள் என்பன களவாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.