
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்
யாழ்ப்பாணம் – நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடிச் சேர்ந்தார்.
கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்றிரவு அவர் பூரணத்துவம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது பூரணத்துவ சாந்தி நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லை ஆதீனத்தைத் தேர்ற்றுவித்த முதலாவது குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், 1981ம் ஆண்டு பூரணத்துவம் பெற்றதன் பின்னர், நல்லை ஆதீனத்தின் குருமுதல்வராக ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இறைபொறுப்பேற்று, அறமாற்றி வந்தார்.