நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சப்பைரதத் திருவிழா

-யாழ் நிருபர்-

வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லயம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவத்தின் இருபத்து இரண்டாம் நாள் திருவிழாவான சப்பைரதத் திருவிழா நேற்று சனிக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார கந்தனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்த மண்டபத்தில் அருள் பாலிக்கும் அலங்கார முருகன், வள்ளி, தெய்வானைக்கு விஷேட, அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீற்று உள்வீதியுடாக வந்து, சப்பைரதத்தில் வெளிவீதியுடாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலய பிரதம சிவஸ்ரீ வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.

பல இடங்களில் வருகைதந்த பக்தர்கள் இந்த சப்பைரதத் திருவிழாவில் கலந்துகொண்டு முருகப் பெருமானின் அருளைப் பெற்றுச் சென்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்