நலன்புரி திட்டம் : மேன்முறையீடுகளுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான மேன்முறையீடுகளை முன்வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இதற்கமைய குறித்த நலன்புரி திட்டத்துக்கு இதுவரையில் 9 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் அதிகமான மேன்முறையீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த நாட்களில் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
நலன்புரி திட்டத்துக்கான பயனாளிகள் பட்டியலில் உள்வாங்கப்படாதவர்களால் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதனையடுத்து அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு இன்று வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது.
கிடைக்கப் பெற்றுள்ள ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை ஆராய்வதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்