நலன்புரி கொடுப்பனவு தொடர்பாக இதுவரையில் 613,172 மேன்முறையீடுகள்!

அஸ்வெசும எனப்படும் ஆறுதல் நலன்புரி கொடுப்பனவு தொடர்பாக, இதுவரையில்  613,172 மேன்முறையீடுகளும், 8,372 ஆட்சேபனைகளும் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க எதிர்வரும் 10 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த நலன்புரி திட்டத்தின், விசேட தேவையுடைய, முதியோர் மற்றும் சிறுநீரகப் பயனாளிகளின் பட்டியலை நேற்று நலன்புரி நன்மைகள் சபை திட்டமிட்டிருந்தது.

எவ்வாறாயினும், இன்று புதன்கிழமை காலை நிதியமைச்சில் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடலின் பின்னர் குறித்தப் பட்டியலை வெளியிடுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்