நண்பர்கள் முன்னிலையில் தனது மனைவியின் ஆடைகளை களைய சொல்லி வற்புறுத்திய கணவன்

இந்தியா மும்பையில் 35 வயது திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் அவரது நண்பர்களின் முன் தன்னை ஆடைகளை அவிழ்க்க கட்டயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. .

மும்பையில் திரைப்பட எடிட்டிங் துறையில் பணியாற்றுவரும் குறித்த பெண் சர்வதேச ஏர்லைன் பைலட்டாக பணியாற்றிவரும் தனது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

அடிக்கடி தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்து பார்ட்டி கொடுக்கும் கணவர் ட்ரூத் ஓர் டார் (TRUTH OR DARE) விளையாடி, தனது மனைவியை அவர்களின் முன் ஆடைகளை அவிழ்க்கும்படி நிர்பந்தம் செய்து வந்துள்ளார்.

அதற்கு மனைவி மறுத்ததால் அவரை பல்வேறு சமயங்களில் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன.

தங்களின் 5 வருடதிருமண வாழ்க்கையில் பலமுறை கணவர் இது போன்று தன்னை நண்பர்கள் முன்னிலையிலும் தனியாக இருக்கும்போதும் அடித்து துன்புறுத்தினார் என்று அப்பெண் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்