நண்பர்களுடன் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வவுனியா-மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்றுள்ளனர்.

மாணவர்கள் குளத்தில் நீராடிக் கொண்டிருந்த போது, ஒரு மாணவன் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வவுனியா, கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் டனுசியன் (வயது 18) என்ற உயர்தர வகுப்பு மாணவராவார்.

சம்பவம் தொடர்பில் மாமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.