நண்பர்களுடன் உறவுகொள்ளுமாறு மனைவியை வற்புறுத்திய கணவன் கைது

வெல்லம்பிட்டிய ஆபாச திரைப்படங்களில் வரும் பாலியல் காட்சிகள் போன்று தனது மனைவியை வற்புறுத்திய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள குறித்த சந்தேக நபர் ஆபாசப் படங்களில் உள்ள பாலுறவு சைகைகளைப் பின்பற்றி தமது நண்பர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டுமென மனைவியை நிர்பந்தித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் அழுத்தத்தை தாங்க முடியாமல் அவரது மனைவி வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸாரினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்